Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!
செவ்வாய் பெயர்ச்சியால் உருவான சத்ருஹந்த யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mars Transit In Virgo Make Shatruhanta Yoga: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது, அதன் நிலைகளால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சத்ருஹந்த யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். சத்ருஹந்த என்பதற்கு எதிரிகளை அழிப்பவர் என்று பொருள்.

ஒரு ஜாதகத்தில் 6 ஆவது வீடு எதிரியின் வீடாகும். இந்த 6 ஆவது வீட்டில் செவ்வாய் அல்லது சனி இருந்தால் அல்லது அன் பார்வை விழுந்தால், இந்த யோகம் உருவாகும். இந்த மங்களகரமான யோகத்தால் கடன் தொல்லை மற்றும் சட்ட சிக்கல்கள் நீங்கும். அதோடு அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். இப்போது சத்ருஹந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
கன்னி ராசிக்கு சென்ற செவ்வாய், மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் சத்ருஹந்த யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால், மேஷ ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த சட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவர். தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும், 6 ஆவது வீட்டில் செவ்வாயின் பார்வை விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த தைரியத்துடன் இருப்பார்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பார்கள். தன்னம்பிக்கையால் எப்பேற்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் இருந்தாலும், அதன் பார்வை 6 ஆவது வீட்டில் விழுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் தைரியத்தைப் பெற்றிருப்பார்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் எதிரிகளை வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications