Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
விருச்சிகம் செல்லும் செவ்வாய்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பா இருக்கப்போகுது..!
Mars Transit In Scorpio On November 2023: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் வீரம், தைரியம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
இத்தகைய செவ்வாய் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் செவ்வாய் நுழையவுள்ளார். சொந்த ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் பல ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது அற்புதமாக இருக்கவுள்ளது.

செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதுவும் விருச்சிக ராசியில் செவ்வாய் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு நவம்பர் 16 முதல் நல்ல நிதி நன்மைகளும், முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். அதிர்ஷ்ட வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எந்த ஒரு முக்கிய வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வழக்கத்தை விட தைரியமும், வீரமும் அதிகமாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். தைரியம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல பலன்களைப் பெறக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் புதிய வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. விளையாட்டுத் துறை, காவல் துறை, இராணுவம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications