Latest Updates
-
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா?
செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் டிசம்பர் 28 வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
Mars Transit In Scorpio On November 2023: வேத ஜோதிடத்தில் செவ்வாய் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியுமாவார். செவ்வாய் ராசியை மாற்றுவதற்கு 45 நாட்கள் ஆகும்.
அந்த வகையில் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நவம்பர் 16 ஆம் தேதி நுழைந்தார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த விருச்சிக ராசியில் செவ்வாய் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இருந்து, அதன் பின் தனுசு ராசிக்கு செல்வார்.

செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதி தான் செவ்வாய். இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சென்றுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர் மிகுந்த பாதுகாப்பின்மையை உணரக்கூடும்.
முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் நஷ்டத்தை சந்திக்கலாம். நிறைய கோபப்படக்கூடும். உங்களால் நிறைய் பணத்தை சேமிக்க முடியாது. நிதி நிலை இக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. நண்பர்களால் ஏமாற்றத்தைக் காணலாம். உங்களுக்கு நண்பராக இருக்கும் துரோகியை இக்காலகட்டத்தில் கண்டறிவீர்கள். சிலர் மிகுந்த பணப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
தந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவரது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்டுகிறது. மேலும் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதிக செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படமாட்டார்கள். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இடமாற்றத்தால் மரியாதை குறையலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சாதகமாக இருக்காது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications