Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் 4 ராஜயோகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Mars Transit In Scorpio 2023: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் வலிமை, வீரம், தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட செவ்வாய் 2023 நவம்பர் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். செவ்வாய் விருச்சிக ராசியில் நுழைவதால், 4 ராஜயோகங்கள் உருவாகின்றன. அதில் விருச்சிக ராசியில் செவ்வாய் நுழையும் போது ருச்ச யோகம் மற்றும் ஆயுஷ்மான் ராஜயோகமும் உருவாகிறது.

மேலும் விருச்சிக ராசியில் புதன் பயணித்து வருகிறார். இதனால் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் ஆதித்ய மங்கள ராஜயோகமும் உருவாகிறது.
இப்படி செவ்வாய் பெயர்ச்சியால் 4 ராஜயோகங்கள் உருவாவதால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
விருச்சிகம் செல்லும் செவ்வாயால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக, மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடுகளை செய்தால், அதில் நல்ல பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது இந்த காலகட்டத்தில் நிறைவேறும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது வழக்கத்தை விட அதிக தைரியத்தை வழங்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுபெறும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். இக்காலத்தில் தந்தை மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடுகள் செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் உங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications