Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் இந்த 3 ராசிக்கு அருமையா இருக்கப்போகுது...
Mars Transit In Sagittarius On December 2023: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் 27 ஆம் தேதி செவ்வாய் குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். தைரியம், வீரம், வலிமையின் காரணியான செவ்வாய் தனுசு ராசியில் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

அதுவும் இந்த பெயர்ச்சியின் தாக்கமானது 45 நாட்கள் வரை இருப்பதால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பணம் அதிகம் சேரும் மற்றும் வெற்றிகளும் குவியும். இப்போது தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக, நல்ல பலன்களை அளிப்பதாக இருக்கும். தொழில் ரீதியாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புகளைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெறக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை வலுவடையும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications