Latest Updates
-
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Mars Transit In Pisces On 23 April 2024: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த ராசி மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் வரவழைக்கலாம்.
அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி செவ்வாய் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

மீன ராசிக்கு செவ்வாய் செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது மீன ராசிக்கு செவ்வாய் செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்காமல் போகலாம். நிதி ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கண் மற்றும் பல் வலி போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடலாம்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பணிபுரிபவர்கள் வேலை தொடர்பான பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், பொறுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகளால் அவதிப்படுவீர்கள். வியாபாரிகள் எந்த ஒரு முடிவையும் நன்கு யோசித்த பின்னரே எடுக்க வேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல வகையான தடைகளை சந்திக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகும். வசதிகள் குறையக்கூடும். சிறுவேலையை முடிக்க கூட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் பல தடைகளை சந்திப்பார்கள். இக்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிரக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications