Latest Updates
-
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
துலாம் செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mars Transit In Libra On October 2023: வேத ஜோதிடத்தில் கிரங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் ராசியை மாற்றுவதற்கு 45 நாட்கள் ஆகும். செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
இந்த செவ்வாய் இதுவரை கன்னி ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் அக்டோபர் 03 ஆம் தேதி மாலை 05.12 மணிக்கு சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார். செவ்வாய் சுக்கிரனின் ராசிக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் மோசமான பலனைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைந்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அருளால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதுவும் வியாபாரம் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு, இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் எதிரிகள் உங்களுக்கு தீங்கிழைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதில் அவர்கள் தோல்வியடைவார்கள். மாணவர்கள் உயர்கல்வி பயில நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். இக்காலத்தில் எடுத்த காரியங்களை குடும்பத்தினரின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள்.
எதிரிகளை இக்காலத்தில் வீழ்த்துவீர்கள். அதுவும் செவ்வாய் 3 ஆம் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டை பார்ப்பதால், தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதே சமயம், நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications