Latest Updates
-
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சிம்மம் செல்லும் செவ்வாய்: ஜூலை 01 முதல் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
Mars Transit In Leo 2023: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் எந்த ஒரு காரியத்தையும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செய்வார். எதற்கும் அச்சம் கொள்ளமாட்டார்.
இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 01 ஆம் தேதி செவ்வாய் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார்.

சிம்மம் செல்லும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். இக்காலத்தில் சிலர் மன உளைச்சலால் அதிகம் அவதிப்படக்கூடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். திருமண வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்ததாக இருக்கும். கூட்டு தொழில் செய்ய விரும்பினால், அதை இக்காலத்தில் செய்ய வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது செலவு செய்யும் வீடு. இதனால் இக்காலத்தில் தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். மேலும் நிதி நிலை மிகவும் பலவீனமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு எதுவும் கிடைக்காது. மன அழுத்தம் சற்று அதிகரிக்கும்.
வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இல்லை. அதிக உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இக்காலகட்டத்தில் உடன் பிறந்தவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்களுக்கு இக்காலம் சாதகமானதாக இருக்காது. வியாபாரத்தில் பண பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பேச்சினாலே பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்களின் தைரியம் சற்று குறைவாக இருக்கும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications