Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சிம்மம் செல்லும் செவ்வாய்: ஜூலை 01 முதல் அடுத்த 1 1/2 மாதம் இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Mars Transit In Leo 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இந்நிலையில் கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய் 2023 ஜூலை 01 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.

சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய், அந்த ராசியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்கு செல்வார். சிம்ம ராசிக்குள் செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது சிம்மம் செல்லும் செவ்வாயால் ஜூலை 01 முதல் ஆகஸ்ட் 18 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செவ்வாய் பகவான் எதிர்பார்ப்புகளையும் ஈகோவையும் அதிகரிப்பார். காதலிப்பவர்களுக்கு இடையே தவறான புரிதல்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக, நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். இக்காலத்தில் உங்கள் குணாதிசயங்களைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக பதட்டத்துடன் இருப்பீர்கள். வசதிகள் குறையும். ஆயினும் நிதி ஆதாயங்களைப் பொறுத்தவரை இக்காலம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
இருப்பினும், இக்காலத்தில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், கடினமாக உழைக்க வேண்டும். இக்காலத்தில் நிலம் வாங்குவதை அல்லது விற்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் தைரியம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான வேலைகளில் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் வலுவிழந்து இருப்பார்கள்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையின் உதவியால் முடிக்கப்படாத எந்த வேலையையும் உங்களால் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பரம்பரை தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சை மிகவும் நிதானத்துடன் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக வாகனத்தை ஓட்ட அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மிகவும் ஆற்றல் நிறைந்து இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய இது சிறந்த காலமாக இருக்கும். சமூகத்திலும் உங்கள் மரியாதை அதிகரிக்கும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலை குறித்து சற்று கவலை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்திருக்கும்.
உங்கள் துணையுடன் எந்த விதமான கருத்து வேறுபாடும் ஏற்படுவதை அனுமதிக்காதீர்கள். உங்கள் மாமியார் பக்கத்துடன் எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகளையும் செய்ய வேண்டாம். உங்கள் நண்பர்களை நம்பாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, பணம் வாங்கவோ வேண்டாம். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வீண் பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது.
வேலையை மாற்ற நினைத்தால் இந்த நேரம் சாதகமாக இருக்காது. இக்காலத்தில் உடன்பிறந்தவர்களுடன் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் முன்னேற்றத்தைத் தரும் காலமாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக நடக்கும். பங்குச் சந்தையில் வேலை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
இக்காலத்தில் எவ்விதமான தகராறிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நல்ல லாபகரமான காலமாக இருக்கும். அரசு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் பல வெற்றிகளைக் காண்பார்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் அடிப்படையில் கடினமான இலக்குகளை கூட அடைவீர்கள். வீட்டில் சில சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், சுப செலவுகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளிநாட்டு நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
படிப்புக்காக வெளியூர் செல்ல நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும், பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பேச்சை நிதானமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் கசப்பான வார்த்தைகளால் நீங்கள் ஒருவருடன் சண்டையிடலாம். உங்கள் தைரியம் சற்று குறையும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் வணிகர்களுக்கு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், இக்காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் நம்பிக்கையும், தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











