Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் 3 ராஜயோகங்கள்: ஜூலையில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..!
Mars Transit In Leo 2023: நவகிரகங்களின் அதிபதியான செவ்வாய், தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாவார். செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார். இந்த செவ்வாய் தற்போது சந்திரன் ஆளும் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த சிம்ம ராசியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை இருப்பார். சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்வதால், மூன்று ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.

அவை நீச்சபங்க ராஜயோகம், மத்ஸ்ய யோகம் மற்றும் விஷ்ணு யோகம் ஆகும். இந்த மூன்று யோகங்களும் செவ்வாய் பெயர்ச்சியால் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஆயினும் இந்த மூன்று யோகங்களால் 3 ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். மேலும் இந்த யோக காலத்தில் அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது தைரியம், வீரத்துடன் தொடர்புடைய வீடு. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அதிக தைரியத்துடன் இருப்பார்கள். முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுகூர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
இக்காலத்தில் எதிரிகள் வலுவிழந்து இருப்பார்கள். இதனால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உங்களுக்கு தான் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல உயர்வைக் காணலாம். அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்கள் நற்செய்திகளைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
தொழில் செய்ய முயற்சித்தால், அதில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். இக்காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனங்கள், வீடு போன்றவை வாங்கும் வாய்ப்புக்கள் உருவாகும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல பதவி உயர்வைப் பெறக்கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இக்காலத்தில் தன்னம்பிக்கை, வீரம், தைரியம் போன்றவை அதிகம் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தலைமைத்துவ பண்புகள் மேம்பட்டு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications