Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
செவ்வாய் பெயர்ச்சியால் பிப்ரவரி 05 முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப் போகுது...
Mars Transit In Capricorn On 05 February 2024: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது செவ்வாய் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 05 ஆம் தேதி செவ்வாய் மகர ராசியில் நுழையவுள்ளார்.

செவ்வாய் மகர ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயம் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரதில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மேலும் வேலை செய்பவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். சொந்தமாக தொழில் செய்து வந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். இதனால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேலும் வணிகர்கள் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணத்தை இக்காலத்தில் பெறுவார்கள். திருமணமானவர்கள் குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. புதிய சொத்துக்களை வாங்க அல்லது விற்க இக்காலத்தில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால், நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் வலிமையால் எப்பேற்பட்ட வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். முடிக்க முடியாத வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications