Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
செவ்வாய் பெயர்ச்சியால் பிப்ரவரி 5 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப்போகுது...
Mars Transit In Capricorn On 05 February 2024: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
இந்த செவ்வாய் தற்போது தனுசு குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் சனி பகவானின் ராசியான மகர ராசிக்கு 2024 பிப்ரவரி 05 ஆம் தேதி நுழையவுள்ளார். செவ்வாய் மகர ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் நிறைவேற்றவுள்ளார். அதோடு நிதி நிலையில் நல்ல உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவுள்ளார். இப்போது மகர ராசியில் நுழையும் செவ்வாயால் நிதி நிலையில் உயர்வைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை வழங்குவார். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரம் செய்து வருபவர்கள், இக்கால கட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை அனுபவம் வாய்தவர்களின் உதவியுடன் தீர்வு காண்பீர்கள். பணியிடத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களை இக்காலகட்டத்தில் பெறக்கூடும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வரும் பிரச்சனைகள் இந்த பெயர்ச்சிக்கு பின் முடிக்கு வரும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்காத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications