Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
செவ்வாயின் 4 ஆம் பார்வையால் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது...
Mars Transit In Capricorn 2024: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் பிப்ரவரி 05 ஆம் தேதி செவ்வாய் சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் மகர ராசியில் நுழைந்ததால், அவரது 4 ஆம் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன.

பொதுவாக செவ்வாய் ராசியை மாற்றும் போது, ஒருவரது தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். அதுவும் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக செவ்வாயின் 4 ஆம் பார்வையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே செவ்வாயின் நான்காம் பார்வையால் மேஷ ராசிக்காரர்களின் புகழும், கௌரவமும் உயரும். ஆரோக்கியம் மேம்படும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் 4 ஆம் பார்வையானது தொழில் மற்றும் வியாபார வீட்டில் விழுவதால், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தலைமைத்துவ திறன்கள் மேம்படும். வெளிநாட்டு பயணத்திற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். போலீஸ், ராணுவம், விளையாட்டு போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் 4 ஆம் பார்வையானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வழக்கத்தை விட தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். மொத்தத்தில், இக்காலம் மிகவும் அருமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications