Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூலை 01 வரை இந்த 4 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனையை சந்திக்க போறாங்க...
Mars Transit In Cancer 2023: நவகிரகங்கள் ஒவ்வொன்றின் ராசி மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 மே 10 ஆம் தேதி மதியம் 1.44 மணிக்கு செவ்வாய் பலவீனமான ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாயின் ராசி மாற்றமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடகம் செல்லும் செவ்வாய், அந்த ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருந்து, பின் சிம்ம ராசிக்குள் நுழைவார். செவ்வாய் கடக ராசியில் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெற்றாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கடக ராசியில் இருக்கும் செவ்வாயால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் எதிரிகள் உங்களை விட வலிமையானவர்களாக இருப்பார்கள். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பேச்சாலேயே பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்கள் வேலைகளிலும் பிரச்சனைகளை சந்திக்கலாம். திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையிலும் பேச்சால் பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக கோபத்தால் உறவினர்களுடன் சண்டைகள் ஏற்படலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சில சிக்கல்களை சந்திக்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் சிலர் தங்கள் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தால் உங்களின் பல வேலைகள் மோசமாகலாம். எனவே கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. எதுவாயினும் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த ராசிக்காரர்கள் வாகனம் ஒட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி நிலையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறைய பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கியமாக பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications