செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 2 மாதம் இந்த ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க..

Mars Transit In Cancer 2023: நவகிரகங்களில் செவ்வாய் தற்போது புதன் ஆளும் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் செவ்வாய் 2023 மே 10 ஆம் தேதி மதியம் 01.44 மணிக்கு, சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

கடக ராசி செவ்வாய் பலவீனமாக இருக்கும் ராசியாகும். இந்த கடக ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருந்து, பின் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைவார். நவகிரகங்களில் தைரியம், வீரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய்.

Mars Transit In Cancer 2023: Effects On 12 Zodiac Signs In Tamil

இந்த செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் தைரியமானவராக எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவராக இருப்பார். அதுவே செவ்வாய் பலவீனமாக இருந்தால், அந்நபர் இரத்தம் மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

மேலும் மிகுந்த கோபத்தால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது கடக ராசிக்கு செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை வரை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் நற்பலன்களை மேஷ ராசிக்காரர்கள் பெறுவார்கள். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். வேலை குறித்த கவலைகள் நீங்கும். பெற்றோரின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. வீட்டுச்சூழல் அமைதியின்றி இருக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சமநிலையில் பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இடமாற்றத்தால், உங்கள் உடன்பிறந்தவர்கள் சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால், அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் தைரியம் அதிகரித்து காணப்படும். எதிரிகள் உங்களை வெல்ல பல முயற்சிகளை எடுப்பார்கள். இக்காலத்தில் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சு சற்று முரட்டுத்தனமாக இருக்கும். உங்கள் பேச்சால் பணியிடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வணிகர்கள் சில சவால்களை எதிர்கொண்டாலும், அதை எளிதில் சமாளிப்பீர்கள். பணிபுரிபவர்கள் தங்களின் கடின உழைப்பால் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில தேவையில்லாத வாக்குவாதத்தால் வாழ்க்கைத் துணையுடனான உறவு பாதிக்கப்படும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அவசரமாக வேலை செய்வதையோ அல்லது எதையும் செய்வதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். இருப்பினும், நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு நனவாகும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனையை சந்திக்கும் அபாயம் உள்ளது. நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரலாம். இக்காலத்தில் உங்கள் மன அழுத்தம் சற்று அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வகையில் செவ்வாய் உங்கள் வழிநடத்துவார். இக்காலத்தில் உங்களின் நிதி பிரச்சனைகள் தீரும். செலவுகள் குறையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளன. எதிரிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இக்காலத்தில் நிறைய சாதிப்பீர்கள். ஆனால் திருமண வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மற்றவர்களுடன் மோதலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்திற்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். திருமணம் மற்றும் உறவுகளில் ஒற்றுமையின்மை மற்றும் பதற்றம் அதிகரிக்கலாம். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், உங்கள் விளையாட்டை ஒரு தொழிலாக மாற்றும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையே சில மோதல்கள் ஏற்படலாம். இருப்பினும், அவருடன் நல்ல உறவைப் பேண நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் ஏதாவது பேச வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவைப் பேணவும் முயற்சிக்க வேண்டும். நிதி ரீதியாக மிதமானதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். மாமியார்-மாமனாருடக் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உங்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி பிரச்சனைகளையும் சந்திக்கலாம். பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். இருவருக்கும் இடையே சண்டைகள் அதிகம் ஏற்படும். நிதானமாகப் பேசி விஷயங்களைக் கையாள அறிவுறுத்தப்படுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். படிப்பில் சிறந்து விளங்க மாணவர்கள் தங்கள் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். செலவுகள் சற்று அதிகரிக்கும். ஆனால் வருமான உயர்வால் அது ஈடுசெய்யப்படும். குடும்ப வாழ்க்கை வழக்கம் போல் சிறப்பாக இருக்கும். தாய்வழியில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக சதி செய்பவர்கள் இக்காலத்தில் தோல்வி காண்பார்கள்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் காதலிப்பவர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கும். திருமணமானவர்களும் வாழ்க்கைத் துணையுடன் பல வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபடலாம். குழந்தைகளின் விஷயத்தில் சற்று டென்சன் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திப்பார்கள். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, May 8, 2023, 16:12 [IST]
Desktop Bottom Promotion