Latest Updates
-
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் வரப்போகுதாம்...ஜாக்கிரதையா இருங்க!
Mars Transit In Aries: ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகரும். 01 ஜூன் 2024 அன்று மாலை 03:27 மணிக்கு மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற போகிறது. செவ்வாய் 42 நாட்கள் ராசியில் தங்கி ஜூலை 12ல் ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய்ப் பெயர்ச்சியின் விளைவுகள் மக்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. அதன்படி சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த பதிவில் வரப்போகிற செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் போது செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெரும்பாலான நடவடிக்கைகளில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது.
பணியிடத்தில் அவர்களின் நற்பெயர் வெகுவாகக் குறையும் மற்றும் ரிஷபம் சொந்தக்காரர்களுக்கு நேரம் சற்று கடினமாக இருக்கும். தொழிலில் எதிர்ப்பாராத நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, எதையும் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மூன்றாவது மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இந்த நேரத்தில் புதன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் அவர்களின் வளர்ச்சியில் எதிர்பாராத தடைகள் ஏற்படும். இந்த தடைகளை எதிர்கொள்ள சரியான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். அவர்களின் வேலை அல்லது தொழில் வளர்ச்சிக்காக நீண்ட தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் அழுத்தமும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் இரண்டாவது மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். இம்முறை செவ்வாய் ஏழாவது வீட்டில் சஞ்சரித்து மக்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குவார். அவர்களின் கடின உழைப்பு புறக்கணிக்கப்படலாம் மற்றும் சரியான பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை நீங்கள் நீண்ட காலம் எதிர்ப்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் அழுத்தங்கள் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் நான்காம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இந்த முறை செவ்வாய் மகர ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் அவர்களின் தொழிலில் பல சிக்கல் ஏற்படலாம்.
செவ்வாய் மேஷ ராசிக்கு மாறுவதால் மக்களின் வசதி வாய்ப்புகள் குறையும். அவர்களின் வேலையில் பணி அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் அவர்களின் வேலையில் திருப்தி குறைவாக இருக்கும். சில அரிதான சந்தர்ப்பங்களில் வேலையை விட்டு தூக்குவதற்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

