Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும்
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க மருத்துவமனையில் அட்மிட் ஆகப்போறாங்களாம்...!
Mars Transit in Aries: கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். செவ்வாய் ஜூன் 1 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றத்தால் சிலருக்கு பலன்கள் கிடைக்கும். ஆனால் மற்றவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது.
இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் வரும். குறிப்பாக அவர்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருக்கலாம். மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். பூர்வீக ராசிக்கு வருவதால் செவ்வாய் பலம் பெறும். இந்த பயணத்தின் போது ருச்சக யோகம் என்ற மிக சக்திவாய்ந்த யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகப் போகிறார்கள்.

செவ்வாயின் முக்கியத்துவம்
ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் தைரியம் மற்றும் வீரத்தின் பிரதிநிதியாவார். செவ்வாய் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க கிரகமாக அறியப்படுகிறது. செவ்வாய் எதிர்மறையான நிலையில் இருந்தால், ஒரு நபர் மிகவும் தைரியமானவராக இருக்கலாம், அதே நேரத்தில் விவேகத்துடன் நடந்துகொள்வார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவார்கள்.
மேஷ ராசியில் செவ்வாய்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆசியால் பலம் பெறலாம். அவர்கள் தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். போர்க் கடவுள் என்று அழைக்கப்படும் செவ்வாயின் உதவியால் இந்த ராசிக்காரர்கள் பலமும் உறுதியும் பெறுவார்கள். மேஷ ராசியின் அதிபதியும் செவ்வாய்தான். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கின் கீழ், மேஷ ராசிக்காரர்கள் தங்களின் திறமைகளை நன்றாக பயன்படுத்துவார்கள்.
மேஷ ராசிக்காரர்கள் சவால்களுக்கு பயப்பட மாட்டார்கள், எப்போதும் மற்றவர்களைப் பாதுகாப்பார்கள். மேலும், மேஷம் தங்கள் நம்பிக்கைகளையும் இலக்குகளையும் அடைய மற்றவர்களை ஊக்குவிப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் சுயமாக வேலை செய்ய விரும்புவார்கள். செவ்வாயின் செல்வாக்கின் கீழ், அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சொந்தமாக காரியங்களைச் செய்வார்கள். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களைப் பின்பற்றி, தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
மேஷ ராசிக்கு செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்துகள் உள்ளது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுகிறது. வீட்டின் ஏழு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியாக செவ்வாய் உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் கண் வலி மற்றும் பல் வலி ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசியை புதன் ஆட்சி செய்கிறது. கன்னி ராசியின் மூன்று மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இந்த ராசியின் எட்டாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி ஏற்படுகிறது. இந்த ராசி மாற்றத்தின் போது கண்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கண் பரிசோதனை செய்து கண் பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கண் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த காலகட்டத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்.
மகரம்
செவ்வாய் மகர ராசிக்கு நான்காம் வீட்டில் நுழைகிறார். இந்த ராசிக்கு 4 மற்றும் 11ம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய். இந்த ராசி மாற்றத்தின் போது, மகர ராசிக்காரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குங்கள். மகர ராசிக்காரர்கள் தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சொந்த உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
