Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: ஜூன் 01 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
Mars Transit In Aries On June 2024: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். இவர் வலிமை, தைரியம் ஆகியவற்றின் காரணியாவார்.
தற்போது செவ்வாய் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் ஜூன் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். 1 வருடத்திற்கு பின் மேஷ ராசிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும், தைரியமும் அதிகரிக்கும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். இப்படி தைரியம் அதிகரிப்பதால், எந்த ஒரு சவாலான வேலையையும் துணிச்சலாக எடுத்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் ஜூன் முதல் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கௌரவம் உயரும். ரியல் எஸ்டேட், மருத்துவம், உணவு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் கௌரவம் உயரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் எழுதியுள்ள மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். ஜூன் மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications