Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: ஜூன் 01 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும்.
Mars Transit In Aries On June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது மீன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஜூன் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். மேஷ ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சற்று சிறப்பானதாக இருக்கும்.

செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுவதால், அதன் நிலைகளில் மாற்றம் ஏற்படும் போது, ஒருவரது இந்த அம்சங்களில் எல்லாம் தாக்கம் தெரியும். அதுவும் செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளால் எதிர்பாராத அளவில் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இருப்பினும், பணத்தை சேமிப்பதில் சிரமப்பட வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதித்து வெற்றி பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications