Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க..
1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mars Transit In Aries On 01 June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிவையில் இருந்தால், அந்நபர் தைரியமானவராக, எதையும் துணிந்து செய்யக்கூடியவராக இருப்பார்.
இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தற்போது குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு ஜூன் மாத தொடக்கத்தில் செல்லவுள்ளார்.

சுமார் 1 ஆண்டு கழித்து சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதலித்து வந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் திருமணம் நடக்கக்கூடும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். புத்திசாலித்தனமும், தைரியமும் அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்குமிக்கவர்களுடனான உறவு கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், இது நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடனான நல்லுறவால் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications