Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலமா இருக்கும்..
Mars Transit In Aries On 01 June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் பயணிப்பார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இந்த செவ்வாய் தைரியம், துணிச்சல், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த செவ்வாய் சுமார் 1 வருடம் கழித்து தனது மூல திரிகோண ராசியான மேஷ ராசிக்குள் ஜூன் 01 ஆம் தேதி நுழைகிறார். செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் மிகவும் மங்களகரமான ருச்சக யோகம் உருவாகவுள்ளது. அதே சமயம் மேஷ ராசியில் ராகுவுடன் செவ்வாய் இணைவதால் அசுப யோகமான அங்காரக யோகமும் உருவாகவுள்ளது. இப்போது செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்ம மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஜோதிடம் கற்க நினைத்தால், அதற்கு சிறந்த நேரம் இது. ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்பு கிடைக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இருப்பினும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. வணிக முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எந்த விதமான சண்டைகளிலும் ஈடுபடாதீர்கள். இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உடன்பிறந்தவர்களுக்கு தகராறு ஏற்படலாம். வணிகம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சர்ச்சைகளில் சிக்குவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்ப பிரச்சகைளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எந்த வேலைகளையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் செய்யும் காரியங்கள் கெட்டுப் போகும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இத்துடன் வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக இருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். எந்த வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்படும். அதனால்தான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இரத்த சம்பந்தமான நோய்கள், விபத்துக்கள் அல்லது அறுவை சிகிச்சையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜங்க் உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் கடுமையான பேச்சில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கோபம் மற்றும் விரக்தியுடன் இருப்பார்கள். உங்களின் முயற்சிகளில் எந்தவிதமான நல்ல பலனும் கிடைக்காமல் போகலாம். உங்களின் மோசமான பேச்சின் காரணமாக வீட்டில் சண்டைகள், வாக்குவாதங்கள் அதிகரிக்கும். உண்ணும் உணவுகளில் கவனம் செலத்த வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கியம் மோசமடையக்கூடும். தொழில் ரீதியாக சிறப்பாக இருந்தாலும், உறவுகளைப் பொறுத்தவரை கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் சற்று ஆக்ரோஷமாக நடந்து கொள்வீர்கள். நிதி ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வெளிநாட்டுடன் தொடர்புடையவர்களுகு நல்ல லாபம் கிடைக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வியாபாரிகள் இந்த நேரத்தில் நல்ல லாபம் பெற முடியும். கல்விக்காக வெளியூர் செல்ல நினைத்தால், காலம் சாதகமாக இருக்கும். சகோரர்களின் ஆதைரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புள்ளது
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிறகு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வானம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிககும். பேச்சை நிதானமாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் கசப்பான வார்த்தைகளால், நீங்கள் ஒருவருடன் சண்டையிடலாம். இந்த நேரத்தில், உங்கள் தைரியம் சிறிது குறையலாம். நிதி பரிவர்த்தனைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த வணிகர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வணிகம் விரிவடையும். கூட்டு தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கட்ட வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். அதிர்ஷ்ட வீட்டில் செவ்வாய் இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக அனைத்து காரியங்களிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











