Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
15 மாதங்களுக்கு பின் கும்பம் செல்லும் செவ்வாய்: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Mars Transit In Aquarius On 15 March 2024: வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் செவ்வாய் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது மார்ச் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. முக்கியமாக இந்த கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருவதால், இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் சனி பகவானுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார்.

இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று அதிகமாக தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலை வலுகூடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபராக இருந்தால், விரும்பிய முன்னேற்றத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலையைப் பெற வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை இக்காலத்தில் அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையை இக்காலத்தில் சந்திப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications