Latest Updates
-
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம்
15 மாதங்களுக்கு பின் கும்பம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mars Transit 2024 In Aquarius After 15 Months: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட செவ்வாயின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்படிப்பட்ட செவ்வாய் கும்ப ராசியில் சுமார் 15 மாதங்களுக்கு பின் நுழையவுள்ளார்.

கும்ப ராசியில் நுழையும் செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது கும்பம் செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மேலும் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும். நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் ஒரு நல்ல வேலை தேடி வரும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல மாற்றம் தெரியும். சிறப்பான நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் இக்காலகட்டத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications