Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
செவ்வாய் பெயர்ச்சியால் நவம்பர் 16 வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும்..
Mars Transit 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
அந்த வகையில் செவ்வாய் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்தார். இந்த துலாம் ராசியின் நவம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைவார்.

செவ்வாய் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த செவ்வாயின் நிலையால் சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ஆசியால் நல்ல நிதி நன்மைகளும், அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கும்.
அதோடு இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் திருமண வாழ்க்கை, கூட்டு தொழில், வணிகம் போன்றவற்றில் காணப்படும்.இப்போது துலாம் ராசியில் பயணிக்கும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளை அலைச்சலை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். இதன் விளைவாக எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபமும் வெற்றியும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் பயணிக்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருப்பீர்கள். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
தாயின் உதவியால் பெரிய வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல பண பலன்களைப் பெறக்கூடும். வாகனம் வாங்குவது அல்லது விற்பதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications