Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
செவ்வாய் பெயர்ச்சியால் உருவாகும் தரித்ர யோகம்: மே 10 முதல் ஜூலை 01 வரை இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்...
Mars Transit 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த செவ்வாய் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மே 10 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு செல்லவிருக்கிறார். கடக ராசியானது செவ்வாயின் பலவீனமான ராசியாகும்.

செவ்வாய் இந்த ராசிக்கு பெயர்ச்சியாவதால் மிகவும் மோசமான தரித்ர யோகம் உருவாகிறது. இந்த தரித்ர யோகத்தால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இந்த தரித்ர யோகமானது ஒரு அசுப யோகம்.
தரித்ர யோகத்தால் நற்பலன்களை விட கெடுபலன்களையே அதிகம் பெறக்கூடும். இப்போது கடகம் செல்லும் செவ்வாயால் உருவாகும் தரித்ர யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தரித்ர யோகமானது பல பிரச்சனைகளைத் தரும். தேவையில்லாத காரியங்களில் அதிகம் ஈடுபட்டு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வருமானம் குறைவாவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். மேலும் கடன் வாங்க வேண்டிய சூழலும் உருவாகும்.
வணிகர்கள் இக்காலத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்கக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தரித்ர யோகத்தால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இக்காலத்தில் வருமானத்தில் பல தடைகளை சந்திக்கக்கூடும். இக்காலத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் குடும்ப செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் கவனமாக செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பண பிரசசனைகளை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தரித்ர யோகமானது மோசமான பலன்களை வழங்கும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை ஏமாற்ற நிறைய பேர் முயற்சிப்பார்கள். நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். திருமண வாழ்வில் பதற்றம் அதிகம் இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களும் தரித்ர யோகத்தால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அனுபவசாலிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்க நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்து, பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

