Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தனுசு ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஜனவரி 16 முதல் இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகப் போகுது...
Mars Rise In Sagittarius On January 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். மேலும் செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார்.
இந்த செவ்வாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னி ராசியில் அஸ்தமனமானார். அந்த அஸ்தமன நிலையில் தான் துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் ஜனவரி 16 ஆம் தேதி தனுசு ராசியில் உதயமாகவுள்ளார்.

கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது வலுவிழந்து இருப்பதோடு, அதனால் கிடைக்கவிருக்கும் பலன்களிலும் தாமதம் ஏற்படும். ஆனால் தனுசு ராசியில் செவ்வாய் உதயமாகவுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அபரிமிதமான நிதி நன்மைகள் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்யும் வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் செவ்வாயின் அருளால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் பணத்தை பெறுவார்கள். சிலருக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட நன்றாக இருக்கும். உங்கள் துணையின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுவதுமாக இருப்பதால், வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











