Latest Updates
-
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தனுசு ராசியில் உதயமாகும் செவ்வாய்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mars Rise In Sagittarius On 16 January 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, சில சமயங்களில் அஸ்தமனமாகி உதயமாகும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் இதுவரை அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில் செவ்வாய் இன்று தனுசு ராசியில் உதயமாகியுள்ளார். செவ்வாய் உதயமாகியுள்ளதால், இதுவரை தொழிலில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் காண முடியாமல் இருந்தவர்கள், இன்று முதல் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு உங்கள் மனதிற்கு பிடித்த வேறு வேலையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. இதனால் மனதளவில் ஒருவித திருப்தி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டாலும், தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வேலையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். வணிகர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளும் சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சாதகமான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட கால முயற்சிக்கு ஏற்ற பலன் இன்று முதல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இதனால் தொழில் ரீதியாக சற்று கலவையான பலன்களைப் பெறக்கூடும். இருப்பினும் மனம் தளராமல் நேர்மறை எண்ணங்களுடன் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாய்ப்புக்களை சற்றும் யோசிக்காமல் ஏற்றுக் கொண்டால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications