Latest Updates
-
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்.. -
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது
ராகு செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Mars Rahu Made Angarak Yog 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நிழல் கிரகமான ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பயணித்து வரும் நிலையில் செவ்வாய் செல்வதால், ராகு மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் இந்த அங்காரக யோகமானது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

இந்த கொடிய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பணம், ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதோடு நிதி இழப்புக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பணம் எங்காவது சிக்கக்கூடும். மிகுந்த மன அழுத்தத்தை உணர நேரிடும். இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உறவுகள் மற்றும் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். இதனால் ஓரளவு மகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது 5 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிகர்களும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் வியாபாரமானது சற்று மந்தமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகும். நிதி இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சிலர் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திப்பார்கள். மேலும் தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது கூறப்படலாம். இக்காலத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். முக்கியமாக புதிய வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications