Latest Updates
-
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.!
5 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் நிகழ்ந்துள்ள செவ்வாய், புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்...
Mars Mercury Conjunction In Capricorn 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. அப்படிப்பட்ட கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மகர ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் புதன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது.

இதனால் இந்த சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே நன்கு தெரியும். அதில் சில ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிப்பதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த சேர்க்கை காலத்தில் உங்கள் வாழ்க்கை துணையும் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் பண வரவைப் பெறுவார்கள். நிதியைப் பொறுத்தவரை, பல வழிகளில் இருந்து பணத்தைப் பெறக்கூடும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











