Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாயால் உருவான நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப் போறாங்க...
Mars Made Neech Bhang Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் யோகங்கள் உருவாகலாம். அவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாவார். செவ்வாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நன்கு தெரியும். சமீபத்தில் செவ்வாய் சந்திரனின் கடக ராசிக்குள் நுழைந்தார். இது செவ்வாயின் பலவீனமான ராசியாகும்.

கடக ராசியில் செவ்வாய் நுழைந்ததும், நீச்சபங்க ராஜயோகம் உருவானது. இந்த யோகத்தினால் 3 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியான உருவான நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது சாதகமான பலன்களை வழங்கும். ஏனெனில் மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் பணிபுரிபவர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால், தொழில் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் ஊடகம், மார்கெட்டிங், வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் நற்பலனை அளிக்கும். ஏனெனில் கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். ஏனெனில் மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புள்ளது. நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். தாயாரின் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு, இக்காலம் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications