Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செவ்வாய் கேது சேர்க்கை: அக்டோபர் 03 முதல் இந்த 3 ராசிகளுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கப் போகுது..
Mars Ketu Conjunction In Libra On October 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதோடு சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கவும் செய்யும். அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு முதலாக துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 03 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் துலாம் ராசிக்கு செல்கிறார். இதனால் துலாம் ராசியில் செவ்வாய், கேது சேர்க்கை நிகழ்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்கையால் நல்ல பண பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பண பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இக்காலத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் எதிர்காலத்தில் நல்ல பண ஆதாயத்தைத் தரும். கலை, ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவார்க்.ள
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகளை செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். பேச்சில் நல்ல மாற்றம் தெயும். முன்பை விட சற்று வலுவாக இருப்பீர்ள். பணிபரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தந்தையுடனான உறவு மேம்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் ஆர்டர்களைப் பெறுவார்கள். முக்கியமாக சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். மொத்தத்தில் இக்காலம் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications