Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சிம்மத்தில் உள்ள செவ்வாய்: அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க மேல அதிர்ஷ்ட காத்து வீசும்..
Mars In Leo 2023: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ராசியை மாற்ற 1 1/2 மாதம் ஆகும். இந்த செவ்வாய் வீரம், தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.
சிம்ம ராசியில் நுழைந்த செவ்வாயின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் செவ்வாயின் ராசி மாற்றத்தால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள்.

சிம்ம ராசியில் நுழைந்த செவ்வாய், அந்த ராசியில் ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி வரை இருப்பார். இன்னும் ஒரு மாத காலம் செவ்வாய் சிம்ம ராசியில் பயணிக்கவுள்ளார். இதனால் அடுத்த ஒரு மாத காலம் 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தைரியம் மற்றும் வீரம் நிறைந்திருப்பார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான வேலை செய்பவர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள்.
இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள் மற்றும் எப்பேற்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அவரது ஆதரவுடன் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
இதுவரை பிரச்சனையில் இருந்த பரம்பரை சொத்துக்கள் பிரச்சனையின்றி கைக்கு வந்து சேரும். வாகனம் அல்லது நிலத்தில் முதலீடு செய்ய இக்காலம் நல்லதாக இருக்கும். கூடுதலாக, வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இக்காலமானது மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் வெற்றிகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். தன்னம்பிக்கை, தைரியம், வீரம் போன்றவை அதிகரிக்கும். சமுகத்தில் மரியாதை அதிகரிக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications