Latest Updates
-
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி!
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: செப்டம்பர் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப் போறாங்க..
Mars Enter Chitra Nakshatra: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், 2 1/2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். செவ்வாய் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றுவார்.
அந்த வகையில் செவ்வாய் வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்கு செல்கிறார். செவ்வாய் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால், நல்ல பண பலன்களைப் பெறுவதோடு, இந்த ராசிக்காரர்களின் விருப்பங்களும் நிறைவேறப் போகிறது. இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் பண பலன்களைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 23 முதல் சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறப் போகிறது. எதிர்பாராத பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. புதிய வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கும். சிலர் பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை சிறப்பாக முடியும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications