Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செவ்வாய் அஸ்தமனமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகுது...
Mars Combust In Virgo On September 2023: நவகிரகங்களில் தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இவர் 2 1/2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இந்த செவ்வாய் ஆகஸ்ட் மாதம் கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.
கிரகங்களிலேயே சூரியனுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது சக்தி வாய்ந்த கிரகம் தான் செவ்வாய். ஒருவருக்கு செவ்வாய் பகவானின் ஆசி இருந்தால் தான், அந்நபர் விளையாட்டு, ராணுவம், போலீஸ் போன்றவற்றில் வெற்றி காண முடியும். மேலும் தொழில் சிறப்பாக இருக்கவும் செவ்வாயின் அருள் வேண்டும். இப்படிப்பட்ட செவ்வாய் செப்டம்பர் 24 ஆம் தேதி அஸ்தமனமாகிறார்.

அஸ்தமனம் என்பது எப்போது ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்கிறதோ, அப்போது அந்த கிரகம் வலிமை இழக்கிறது. அதாவது, செவ்வாய் சூரியனுக்கு அருகில் பயணிக்கும் காலம் தான் செவ்வாய் அஸ்தமன காலம். இக்காலத்தில் செவ்வாய் மிகவும் பலவீனமாகவும், சக்தியிழந்தும் இருப்பார். இந்நிலையில் செவ்வாயின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
நவகிரகங்களில் சூரியன், ராகு, கேது தவிர மற்ற அனைத்து கிரகங்களுமே அஸ்தமனமாகும். ஏற்கனவே செவ்வாய் தோஷம் காரணமாக பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்கள், இந்த செவ்வாய் அஸ்தமன காலத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். இப்போது செவ்வாய் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பரம்பரை சொத்துக்களில் இருந்த தகராறுகள் சரியாகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்ப சூழல் அமைதியாகும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆனால் கடன் வாங்க நினைத்தால், அதில் சிரமத்தை சந்திக்கக்கூடும். வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மன அழுத்தம் சற்று குறையும். இக்காலத்தில் மேற்கொள்ளும் வேலைகள் அதிக முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே எளிதில் முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இதுவரை தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்து வந்தால், அது குறையும். உடன்பிறந்தோருடனான உறவு மேம்படும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்காவிட்டாலும், பிரச்சனைகள் ஏதும் இருக்காது. வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து இருந்தால், இனிமேல் சீராக இருக்கும். ஆனால் திடீரென்று செலவுகள் அதிகரித்து, அதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications