Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
கன்னியில் செவ்வாய் அஸ்தமனமாவதால் செப்டம்பர் 24 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Mars Combust in Virgo 2023: நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் 2 1/2 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் தைரியம், வீரம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்த செவ்வாய் தற்போது புதன் ஆளும் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமனமாகிறார். அதாவது செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். இதனால் இக்காலத்தில் செவ்வாய் வலுவிழந்து பலவீனமாக இருப்பார். இதன் விளைவாக செவ்வாய் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடும்.

செவ்வாய் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் செவ்வாய் அஸ்தமனமாவதால் பண இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செவ்வாய் அஸ்தமனத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை சொல்ல வேண்டும். மேலும் வெள்ளி மற்றும் செம்பு ஆபரணங்களை அணியலாம்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையை இழக்கும் வாய்ப்புக்கள் உருவாகலாம் அல்லது பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண முடியாது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். மேலும் இக்காலத்தில் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகலாம்.
எனவே கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. செவ்வாய் அஸ்தமனத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்க சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை சொல்வதோடு, தினமும் சூரிய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications