Latest Updates
-
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கன்னியில் அஸ்தமனமாகும் செவ்வாய்: செப்டம்பர் 24 முதல் இந்த 3 ராசிக்காரங்க பல பிரச்சனைகளை சந்திப்பாங்க..
Mars Combust In Virgo On 24 September 2023: கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் துணிச்சல், தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் மிகவும் தைரியசாலியாக, எதையும் துணிந்து செய்யக்கூடியவராக இருப்பார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், அதிகம் பயப்படக்கூடியவராக இருப்பார்.
இந்த செவ்வாய் தற்போது எதிரியான புதனின் ராசியில் பயணித்து வருகிறார். அதாவது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் கன்னி ராசியில் செப்டம்பர் 24 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். கிரக அஸ்தமனம் என்பது சூரியனுக்கு மிக அருகில் கிரகங்கள் பயணிக்கும் காலமாகும். இக்காலத்தில் கிரகங்கள் வலுவிழந்து பலவீனமாக இருக்கும்.

செவ்வாய் அஸ்தமனமாவதால், இக்காலத்தில் செவ்வாய் வலுவிழந்து இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிலர் இக்காலத்தில் கடன் வாங்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். உங்களின் செயல்திறனிற்கு பாராட்டு கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். வியாபாரிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் 24 முதல் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகளையும், தோல்விகளையும் சந்திக்கலாம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்காது. இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் செப்டம்பர் 24 முதல் பல தோல்விகளை சந்திக்க நேரிடும். இதனால் மிகுந்த வருத்தப்படக்கூடும். பணியிடத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திக்கக்கூடும். இக்காலத்தில் உங்கள் எதிரிகள்/போட்டியாளர்கள் சற்று வலிமையாக இருப்பார்கள். உங்கள் வேலையில் சில இடையூறுகள் அல்லது தடைகளை சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications