கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனமாவதால் நாளை முதல் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..

Mars Combust In Virgo On 24 September 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றுவதைத் தவிர, அஸ்தமனமாகி, உதயமாகவும் செய்யும். கிரக அஸ்தமனம் என்பது கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் காலமாகும். இக்காலத்தில் சூரியனுக்கு அருகில் செல்லும் கிரகங்கள் பலவீனமாக இருக்கும். மேலும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில், நவகிரகங்கள் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகவுள்ளார்.

Mars Combust In Virgo On 24 September 2023: Effects On 12 Zodiac Signs In Tamil

செவ்வாய் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலுமே காணப்படும். இப்போது கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனமாவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மன கவலைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மனதில் ஒருவித பயம் இருந்தவாறு இருக்கும். தொழில் ரீதியாக மோசமாக இருக்கும். நஷ்டங்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இக்காலமானது நிதி ரீதியாக ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது சற்று குறைவாகவே இருக்கும். நிதி ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை போதுமான புரிதல் இல்லாததால் சிக்கல்களை சந்திக்கக்கூடும். எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மன அழுத்தம் சற்று அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாக பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் கடமைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் சூழல் உருவாகலாம்.

கடகம்

கடக ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தைரியத்தை இழக்க நேரிடும். இவர்களின் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்கலாம். உடன்பிறந்தோருடன் பிரச்சனைகள் ஏற்பட்டு சவால்களை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனையில் சிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தன்னம்பிக்கையை இழக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்கக்கூடும். பணப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காமல் அவதிப்படக்கூடும். வெற்றி காண வேண்டுமானால், கவனமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் முன்னேற்றத்தைக் காண முடியாது. கூடுதலாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால், ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். மன கவலைகள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பண பிரச்சனை மற்றும் உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை தொடர்பாக தேவையற்ற பயணங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் அதுவே பல பிரச்சனைகளை வர காரணமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிதமான நிதி நன்மைகளையும், வெற்றியையும் காண்பார்கள். தொழிலில் பல தடைகளை சந்திக்க நேரிடும். மேலும் உங்களின் தைரியம் மற்றும் உறுதிபாடு குறைவதையும் காணலாம்.

தனுசு

தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒருவித நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பார்கள். தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்திக்கக்கூடும். மேலும் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

மகரம்

மகர ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த செவ்வாயின் மாற்றமானது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். தொழிலில் சில பின்னடைவுகளை சந்திப்பதோடு, வாழ்க்கையில் சில மாற்றங்களைக் காணக்கூடும். கூடுதலாக நிதி இழப்புக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கை, நிதி விஷயங்கள் மற்றும் உறவுகளில் சில சவால்களை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தோருடன் சண்டைகள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் எந்த ஒரு காரியத்திலும் தடைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். வணிகர்களின் முயற்சிகளில் தடைகள் ஏற்படும் மற்றும் கூட்டு வணிகம் செய்பவர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்காமல் போகும். இதனால் மிகுந்த ஏமாற்றமடையக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, September 23, 2023, 15:20 [IST]
Desktop Bottom Promotion