Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. இந்த மார்ச் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
March 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்கள் மார்ச் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். வேலையில் புதிய பொறுப்புக்களைப் பெற்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கம். இம்மாதத்தில் பிடிவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். புத்திசாலித்தனமாக எந்த முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இம்மாதத்தில் தவறான புரிதல் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியமும் சற்று பலவீனமாக இருக்கும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு மார்ச் மாதம் நல்ல வளர்ச்சியை தரும் மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக, எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சற்று ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு வாங்க இம்மாதம் சிறந்ததாக இருக்கும. புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இம்மாதம் சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். அதுவும் நீங்கள் ஏதாவது ஒரு புதிய வீடு வாங்க தீவிரமாக ஈடுபட்டிருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவருடன் நல்ல தரமான நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு மார்ச் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் செய்யும் காரியங்களில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர்த்து, உத்வேகம் பெறுங்கள்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்வர்களுக்கு மார்ச் மாதமானது நல்ல மாற்றங்கள் நிறைந்திருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் புதிதாக ஏதாவது நடக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், புதிய வேலை கிடைக்கும் வரை காத்திருங்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். ஏற்கனவே காதலித்து வந்தால், அந்த காதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மார்ச் மாதம் உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். ஒருதலையாக காதலித்து வருபவர்கள், தங்கள் காதலை அன்புக்குரியவரிடம் இம்மாதத்தில் தெரிவித்தால் நேர்மறையான பதிலைப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதையும் கையாளும் போது மிகவும் பொறுமையாக இருங்கள்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் கடினமாக இருக்கும். இம்மாதத்தில் அதிகம் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்காதீர்கள். இம்மாதத்தில் உங்கள் வேலையில் கவனத்தை செலுத்துங்கள். இம்மாதத்தில் கடின உழைப்பால் அனைவரின் மனதையும் வெல்வீர்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 8. இந்த எண்ணிற்கு உரியவர்கள் மார்ச் மாதத்தில் தேவையில்லாமல் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள். வேலை வேலை என்று சுற்றாமல், இம்மாதத்தில் உங்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். இந்த மாதத்தில் சில நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த எண்ணிற்கு உரியவர்கள் மார்ச் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயங்கள் இந்த மாதத்தில் நடக்காமல் போகலாம். இருப்பினும் பொறுமையாக இருங்கள். இதனால் உங்கள் பொறுமை ஒரு நல்ல பலனைத் தரும். இந்த மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.



Click it and Unblock the Notifications