Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
உலகிலேயே அதிக காரம் கொண்ட 10 மிளகாயை 31 நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த மனிதர்!
நமது தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் மிளகாய். கார சுவையைக் கொண்ட சாதாரண மிளகாயை சிறிது கடித்தாலே கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் கொட்டும், நாக்கு எரியும். ஆனால் இப்படிப்பட்ட மிளகாயை ஒருவர் அள்ளி அள்ளி சாப்பிடுவதை பார்த்துள்ளீர்களா?
பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாயானது குறைவான காரத்தைக் கொண்டது. மிளகாயில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உலகிலேயே அதிக காரம் கொண்ட ஒரு வகையான மிளகாய் தான் பூட் ஜோலோகியா.
இப்படிப்பட்ட அதிக காரம் கொண்ட பூட் ஜோலோகியா மிளகாயை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சாதாரணமாக உட்கொண்டு, உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கிரெக் ஃபோஸ்டர் 30.01 நொடிகளில் சுமார் 10 பூட் ஜோலோகியா மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் வீடியோ கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கிரெக் ஃபோஸ்டர் ஒவ்வொரு பூட் ஜோலோகியா மிளகாயை வேகமாக சாப்பிடுவதைக் காணலாம். இந்த மிளகாயை சாப்பிட்ட பின், முழுமையாக சாப்பிட்டுவிட்டேன் என்பதை வெளிக்காட்டும் வகையில் பெருமையாக நாக்கை நீட்டியும் அவர் காட்டியுள்ளார். அதன் பின் கிரெக்கிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
கிரெக் ஃபோஸ்டர் இப்படி மிளகாய்களை சாப்பிட்டு சாதனை படைத்தது ஒன்றும் முதல் முறை அல்ல. கின்னஸ் உலக சாதனைகளால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இவர் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு டிசம்பரில், 3 கரோலினா ரீப்பர் மிளகாயை அதிவேமாக 8.72 நொடிகளில் சாப்பிட்டு முடித்து சாதனை படைத்துள்ளார். அதற்கு முன் 2017 ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாயை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கிரெக்கிற்கு சிறு வயதில் இருந்தே காரமான உணவுகள் மிகவும் பிடிக்குமாம். ஏன் வீட்டிலேயே மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறாராம். பல தசாப்தங்களாக காரமான உணவுகளை உட்கொண்டு, அதை சகித்துக் கொள்ளும் திறன் உள்ளது. தற்போது இவரால் உலகின் மிகவும் காரமான மிளகாயையும் சாப்பிட முடிகிறதாம். கிரெக் ஃபோஸ்டரைப் போல வேகமாக மிளகாய் சாப்பிடக்கூடிய ஒருவரை உங்களுக்குத் தெரியுமா?



Click it and Unblock the Notifications