Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
சனி அமாவாசையான இன்று சனி பகவானின் அருளால் இன்று இந்த 4 ராசிகளுக்கு பண மழை பொழியப் போகுது..
Mahalaya Shani Amavasya 2023: வேத ஜோதிடத்தில் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அதுவும் இந்த அமாவாசை சனிக்கிழமையில் வந்தால், அது இன்னதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2023 அக்டோபர் 14 ஆம் தேதி புரட்டாசி மாதத்தின் மகாளய அமாவாசையானது சனிக்கிழமையில் வந்துள்ளது.
மகாளய காலத்தில் இறந்தவர்கள் பூமிக்கு வந்து தங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மகாளய பட்ச காலத்தின் கடைசி நாள் தான் மகாளய அமாவாசை. இந்த சனிக்கிழமையில் வரும் இந்த மகாளய அமாவாசையான இன்று சனி பகவானின் பரிபூர்ண அருளால் ஒருசில ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவும், தொழிலில் முன்னேற்றமும் கிடைக்கவுள்ளது. இப்போது சனிபகவானின் அருளைப் பெறும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சனி அமாவாசையான இன்று ரிஷப ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையானது வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று சனி பகவானின் ஆசீர்வாதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். சனி தொடர்பான வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
சனி அமாவாசையான இன்று மிதுன ராசிக்காரர்களும் சனி பகவானின் ஆசியைப் பெறுவார்கள். அதுவும் இந்த அமாவாசையில் ஏழை எளியோருக்கு எந்த அளவு உதவுகிறீர்களோ, அந்த அளவில் சனி பகவான் நற்பலனை வழங்குவார். சிலர் தந்தையின் முழு ஆதரவையும் பெறுவார்கள். சிலருக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக இன்று லாபகரமானதாக இருக்கும்.
துலாம்
சனி அமாவாசையான இன்று சனி பகவானின் அருளால் துலாம் ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆட்டோமொபைல் துறையில் வேலை செய்பவர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள். இன்று தான தர்மங்களை செய்தால், சனி பகவான் அதிர்ஷ்டத்தின் ஆதரவை கிடைக்கச் செய்து, பண மழையில் நனைய வைப்பார். இன்று உங்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications