Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
Maha Shivratri 2025: இந்த 7 ராசிக்காரங்க பிறவியிலேயே சிவனின் ஆசியைப் பெற்றவர்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Maha Shivratri 2025: இந்து மதத்தில் சிவபெருமான் அழிவு மற்றும் மாற்றத்தின் கடவுளாக கருதப்படுகிறார். இந்த சிவபெருமானுக்கு உரிய மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் தான் மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் சிவ பக்தர்கள் சிவனின் அருளைப் பெற விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவரை வழிபடுவார்கள்.
ஜோதிடத்தின் படி, அனைத்து ராசிக்காரர்களும் பல்வேறு தெய்வங்களுடன் ஆழ்ந்த ஆன்மீக தொடர்பைக் கொண்டிருக்க முடியும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அவர்களை அறியாமலேயே சிவபெருமான் மீது வலுவான பக்தியைக் கொண்டிருப்பார்கள்.

ஏனெனில் அந்த ராசிக்காரர்களுடன் சிவபெருமானுக்கு அழமான தொடர்பு இருக்கும். சொல்லப்போனால் அந்த ராசிக்காரர்கள் சிவனின் விருப்பமான ராசிக்காரர்கள் மற்றும் பிறவியிலேயே சிவபெருமானின் ஆசியைப் பெற்றவர்கள். இப்போது எந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் விருப்பமான ராசிக்காரர்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் ஆற்றல் மற்றும் தைரியத்தின் கிரகமாகும். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆற்றல் மிக்கவர்கள், லட்சியவாதிகள் மற்றும் தைரியமானவர்கள். இந்த மேஷ ராசிக்காரர்களின் தைரியம் மற்றும் மன உறுதிக்கு காரணம் சிவனின் பரிபூர்ண ஆசி இவர்களுக்கு இருப்பது தான்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் காதல் மற்றும் அழகின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் நிலையானவர்கள், நம்பகமானவர்கள். இந்த ரிஷப ராசிக்காரர்களும் சிவபெருமானின் மிகவும் விருப்பமான ராசிக்காரர்களாகும். இந்த ராசிக்குரியவர்கள் இயற்கையாகவே சிவனின் மீது அலாதியான பக்தியைக் கொண்டிருப்பார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் உணர்ச்சிகள் மற்றும் உள்ளுணர்வின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த கடக ராசிக்குரியவர்கள் பெரும்பாலும் சென்சிடிவ்வானவர்கள், நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரக்கூடியவர்கள். இந்த கடக ராசிக்காரர்களையும் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்குமாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவத்தின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பர். இந்த சிம்ம ராசிக்குரியவர்களுக்கு இயற்கையாகவே சிவபெருமான் மீது பக்தி அதிகமாக இருக்கும். ஏனெனில் சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானின் பிரியமான ராசிக்காரர்களுள் ஒருவராவர்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் உறுதியானவர்கள் மற்றும் சற்று மர்மமானவர்கள். இந்த விருச்சிக ராசிக்காரர்களையும் சிவபெருமானுக்கு பிடிக்கும். இந்த ராசிக்காரர்கள் பிறவியிலேயே சிவனின் ஆசியைப் பெற்றவர்கள்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு ஞானத்தின் காரணியாக கருதப்படுகிறார். இந்த தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச விரும்பிகள், நம்பிக்கையானவர்கள் மற்றும் தத்துவவாதிகள். இந்த சிவபெருமான் தனுசு ராசிக்காரர்களின் ஆன்மீக இயல்பு மற்றும் அறிவின் தேடலுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் அதிபதியும் குரு பகவான் தான். இந்த மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் கருணை உள்ளம் கொண்டவர்கள், வலுவான உள்ளுணர்வைக் கொண்டவர்கள் மற்றும் கலைத்திறன் உடையவர்கள். இந்த மீன ராசிக்காரர்களும் சிவபெருமானின் ஆசியை பிறவில் இருந்தே பெற்றவர்கள். இதன் காரணமாகவே இந்த ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிகளை விட சிவ பக்தி அதிகமாக உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications