Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
20 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் மகா கேதார் யோகம்: இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..!
Maha Kedar Yoga: கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இடப்பெயர்ச்சியாகின்றன. அப்படி இடம் பெயரும் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
அந்த வகையில் அரிய யோகங்கள் சில சமயங்களில் உருவாகும். அதுவும் பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி, அது மனித வாழ்வில் சில எதிர்பாராத தாக்கத்தை திடீரென்று ஏற்படுத்தும். இந்நிலையில் 4 வீடுகளில் 7 கிரகங்கள் இருக்கும் போது, மகா கேதார் யோகம் உருவாகும்.

இந்த யோகம் தற்போது உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் மீது இந்த யோகத்தின் தாக்கம் சிறப்பானதாக இருக்கும். அதாவது, 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மகா கேதார் யோகமானது மிகவும் அட்டகாசமான பலன்களை வாரி வழங்கும். ஏனெனில் இந்த யோக காலத்தில் கஜகேசரி, புதாதித்ய ராஜயோகம் போன்ற யோகங்கள் 11 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் சொத்து பரிவர்த்தனைகளால் எதிர்பாராத பலனைப் பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு, இந்த யோக காலம் அட்டகாசமான பலன்களை வழங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மகா கேதார் யோகமானது மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் சிறப்பாக நடக்கும். நிதி நிலை வலுபெறும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள முக்கிய வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா கேதார் யோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இந்த யோகத்தால் மன உளைச்சல் சற்று இருந்தாலும், தொடர்ந்து நல்ல பண வரவு இருக்கும். திடீரென்று எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல பண வரவைப் பெறலாம். இந்த யோக காலத்தில் உங்களின் பேச்சினால் பல நல்ல காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட காலமாக புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இனி வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கவும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications