Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
2023 மதுரை சித்திரை திருவிழா எப்போது தொடங்குகிறது? அதன் முழு விவரம் இதோ!
Madurai Chithirai Thiruvizha 2023: உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு கோவில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். அதேப் போல் மதுரை சித்திரை திருவிழாவும் உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்த சித்திரை திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு வருவதுண்டு.
முக்கியமாக இந்த சித்திரை திருவிழாவில் தென்னிந்திய மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரரின் ஆசியை பெறுவார்கள். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 08 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

16 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் என்று பார்த்தால், ஏப்ரல் 23 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றமும், ஏப்ரல் 30 ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து மே 1 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டமும், மே 5 ஆம் தேதி பௌர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மதுரை சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றாலே நினைவிற்கு வருவது மதுரை சித்திரை திருவிழா தான். இந்த திருவிழாவின் சிறப்பு என்றால், அது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். இந்த திருவிழாவானது சைவ-வைணவ பக்தர்கள் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு மிகப்பெரிய திருவிழா.
மதுரை சித்திரை திருவிழாவின் போது மதுரை மாநகரமே கோலாகலமாக இருக்கும். இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மையும், அப்பனும் பல்வேறு வாகனங்களில் மதுரையின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்கள். இப்போது மதுரை சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் என்ன நடக்கும் என்னும் விவரத்தைக் காண்போம்.
23 ஏப்ரல் 2023 - கொடியேற்றம் - கற்பக விருட்ஷம், சிம்ம வாகனம்
24 ஏப்ரல் 2023 - பூத வாகனம், அன்ன வாகனம்
25 ஏப்ரல் 2023 - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
26 ஏப்ரல் 2023 - தங்க பல்லக்கு
27 ஏப்ரல் 2023 - வேடர் பரி லீலை - தங்க குதிரை வாகனம்
28 ஏப்ரல் 2023 - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை - ரிஷப வாகனம்
29 ஏப்ரல் 2023 - நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்
30 ஏப்ரல் 2023 - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் - வெள்ளி சிம்மாசன உலா
1 மே 2023 - மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா
2 மே 2023 - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
3 மே 2023 - தேரோட்டம் - சப்தாவர்ண சாப்ரம்
3 மே 2023 - கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரை எழுந்தருளல்
4 மே 2023 - தீர்த்தவாரி - வெள்ளி ரிஷபம் சேவை
4 மே 2023 - கள்ளழகர் எதிர்சேவை
5 மே 2023 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் - 1000 பொன்சப்பரம்
6 மே 2023 - காலையில் சேஷ வாகனத்தில் புறப்படுதல்
6 மே 2023 - மதியம் கருட வாகனத்தில் மாண்டுக மகரிஷிக்கு மோட்சம் தருதல், நள்ளிரவு 12 மணிக்கு தசாவதாரக் காட்சி
7 மே 2023 - காலை மோகினி அவதாரம், பிற்பகல் ராஜாங்க அலங்காரம், புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்
8 மே 2023 - கள்ளழகர் திருப்பதியில் எழுந்தருளல்



Click it and Unblock the Notifications