Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி நாளில் நிகழும் சந்திர கிரகணம்: இன்று இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
Lunar Eclipse On Holi 2024: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது ஒரு ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். நவகிரகங்களில் கேது ஒரு பாவ கிரகமாக கருதப்படுகிறது. இந்த கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். இப்படிப்பட்ட கேது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்தார்.
இந்த கன்னி ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதனால் 2024 ஆம் ஆண்டில் கேது கன்னி ராசியில் பயணிக்கும் காலகட்டத்தில் பல கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பார். அப்படி ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும்.

மறுபுறம் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இந்த சந்திரன் மார்ச் 24 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்தார். இந்த கன்னி ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருந்து பின் துலாம் ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே கன்னி ராசியில் கேது சந்திரன் இணைவதால், அசுப யோகமான கிரகண தோஷம் உருவாகிவுள்ளது.
இந்த யோகமானது மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்த அசுப யோகத்தால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த கிரகண தோஷம் ஹோலி பண்டிகையும், சந்திர கிரகணமும் நிகழும் காலத்தில் நிகழ்ந்துள்ளது. இப்போது கிரகண தோஷத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வசதிகளும் குறையும். ஒவ்வொரு வேலையிலும் தடையை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையில்லாத முதலீடுகளை தவிர்க்க வேண்டும். நிதி இழப்புக்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் அதிகம் அவதிப்படலாம். வீட்டில் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமான வேலைகளில் தடையை சந்திக்க நேரிடும். பொருள் வசதிகளும் குறையலாம். ஒருசில காரணங்களால் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்த இரண்டு நாட்கள் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கி அவதிப்படுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கிரகண தோஷம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். தேவையில்லாத செலவுகளால் அதிகம் அவதிப்படுவீர்கள். மேலும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைத்தூக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெற்றிகளை அடைய சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications