Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Lunar Eclipse 2023: ஆண்டின் கடைசி சந்திர கிரகண நாளில் நிகழும் அபூர்வம்: இந்த ராசிகளுக்கு யோகம் அடிக்கப் போகுது
Lunar Eclipse 2023: ஒவ்வொரு ஆண்டும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதுண்டு. அப்படி கிரகணங்கள் நிகழும் போது, அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

அதுவும் இந்த சந்திர கிரகணத்தின் போது அபூர்வமாக மேஷ ராசியில் குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பு வாய்ந்தது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, அக்டோபர் 28 ஆம் தேதி இரவு 11.32 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 3.26 மணி வரை நீடித்திருக்கும்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால், இதன் தாக்கம் இந்தியாவில் இருக்கும். இந்நிலையில் இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த கிரகணம் நிகழ்வதால், இந்த ராசிக்காரர்கள் இந்த கிரகணத்தால் மனக்குழப்பத்தில் இருப்பார்கள். சிலருக்கு தலையில் காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். சிலர் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகளைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகள் குறித்து கவலைப்படுவீர்கள். சிலரது முக்கியமான வேலைகள் பாதியில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சந்தோஷங்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இத்னால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். சிலர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்து. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏதாவது ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படக்கூடும். அதோடு நிறைய மருத்துவ செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவமானத்தை சந்திக்க நேரிடும். அதோடு யாருடனாவது பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடலாம்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பொருள் இன்பத்தைப் பெறக்கூடும். சிலர் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு தொலைந்து போன அல்லது சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் இந்த கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் சற்று மந்தமாகவே இருக்கும். அதோடு சிலர் பண இழப்புக்களையும் சந்திக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











