Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
மறக்காம இன்னைக்கு இந்த பொருட்களை தானம் செய்யுங்க.. சந்திர கிரகணத்தால் சந்திக்கும் பிரச்சனை குறையும்..
Lunar Eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆவணி மாத பௌர்ணமி நாளான செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் இந்த நாளில் நிகழும் சந்திர கிரகணத்தை இந்தியாவின் சில பகுதிகளில் நன்கு காண முடியும். என்ன தான் சந்திர கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தின் படி சந்திர கிரகணம் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது.
மேலும் இந்த கிரகண நாளில் ஒருசில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது. எப்படி சந்திர கிரகண நாளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாதோ, அதேப் போல் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், ஜாதகத்தில் சந்திரனின் நிலையை வலுவாக்கி, கிரகணத்தின் மோசமான தாக்கத்தைக் குறைக்கலாம். பொதுவாக தானம் செய்வது புண்ணியத்தைத் தரும் என்பார்கள்.

அதுவும் சந்திர கிரகண நாளில் ஒருசில பொருட்களை தானம் செய்வது ஒருவரை நிதி ரீதியாக வலுவாக்கும். இப்போது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகண நாளில் எந்த பொருட்களை ஒருவர் தானம் செய்தால் கிரகணத்தின் மோசமான தாக்கத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம்.
வெள்ளை நிற பொருட்கள்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சந்திர கிரகண நாளில், கிரகணத்தின் தாக்கத்தைக் குறைக்க வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வது நல்லது. அதுவும் சந்திர கிரகணம் செப்டம்பர் 08 ஆம் தேதி அதிகாலை 2.25 வரை நீடித்திருக்கிறது. இந்நாளில் தான் மகாளய பட்சம் தொடங்குகிறது. எனவே வெள்ளை நிற உணவுகளை தானம் செய்வதன் மூலம் சந்திர தோஷம் நீங்குவதோடு, முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
ஆடைகள்
சந்திர கிரகண நாளில் ஆடைகளை தானம் செய்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த கிரகண நாளன்று வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது.
வெள்ளி அல்லது அரிசி
சந்திர கிரகண நாளன்று வெள்ளி அல்லது அரிசி போன்றவற்றை தானம் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் சந்திரனின் நிறம் வெள்ளை. எனவே இந்த நாளில் சந்திரனின் அருளைப் பெறவும், மகிழ்ச்சியும், செழிப்பும், நிலைத்திருக்கவும் வெள்ளை நிற பொருட்களான அரிசி அல்லது வெள்ளி போன்றவற்றை தானம் செய்யுங்கள்.
சர்க்கரை
சந்திர கிரகண நாளில் தானங்களை செய்வது மிகவும் சிறப்பான செயலாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், கிரகணத்தின் எதிர்மறை ஆற்றல் நீக்கப்படுவதோடு, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. எனவே கிரகணத்தின் தாக்கம் குறைய சர்க்கரையை தானம் செய்யுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சந்திர கிரகண காலத்தில் தானம் செய்யும் போது, சந்திர தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது. அதோடு லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்றும் செல்வத்தைப் பெருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications