2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

Lunar Eclipse 2023: சமீபத்தில் தான் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 05 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணமானது இரவு 08.45 மணிக்கு தொடர்ந்து நள்ளிரவு 01 மணிக்கு முடிவடைகிறது.

முக்கியமாக இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் சூதக் காலம் இல்லை. சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்கிறது. அதுவும் இந்த ஆண்டின் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும்.

 Lunar Eclipse 2023: These Zodiac Signs Luck Will Shine In Tamil

பொதுவாக கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. சாஸ்திரங்களில், ராகு சந்திரனை சந்திக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.

இப்போது 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதைப் பாருங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப் போகிறது. தற்போது மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

புதிய தொழிலைத் தொடங்க சாதகமாக இருக்கும். சந்திர கிரகணத்தால் உங்கள் செல்வம் மற்றும் சொத்துக்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இனி உங்களுக்கு கிடைக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்துடன், பணியிடத்தில் மரியாதையையும் பெறுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நற்பலன்களைத் தரும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த காலம். உங்கள் இலக்கை அடைய புதிய திட்டங்களை தொடங்குவீர்கள் மற்றும் அதில் வெற்றியையும் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். உங்கள் பேச்சை மட்டும் இக்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் தொடர்பான கவலையும், அழுத்தமும் நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

புதிய வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இனி நல்ல வேலை கிடைத்து உங்களின் தேடல் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் முயற்சி வெற்றி அடையும். நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, April 29, 2023, 17:21 [IST]
Desktop Bottom Promotion