Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புத்த பூர்ணிமா நாளில் வரும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் வளர்ச்சி ஏற்படப் போகுது
Lunar Eclipse 2023 On Buddha Purnima: 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்தன. இந்நிலையில் 15 நாட்களுக்குள்ளேயே இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 05 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்நாளில் தான் புத்த பூர்ணிமாவும் வருகிறது.
இதனால் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா நாளில் நிகழ்கிறது.

முக்கியமாக இந்த கிரகணமானது துலாம் ராசியின் சுவாதி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இதுமட்டுமின்றி, இந்நாளில் தான் சதுர்கிரக யோகமும் உருவாகிறது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த யோகம் உருவாவதால், இந்த சந்திர கிரகணமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் புத்த பூர்ணிமா நாளில் சந்திர கிரகணம் நிகழ்வதால் 3 ராசிக்காரர்கள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகண நாளில் பல அற்புதங்கள் நிகழும். பல எதிர்பாராத விஷயங்களால் மிகப்பெரிய நன்மைகளை பெறக்கூடும். தொழிலை விரிவுப்படுத்த நினைத்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வினால், பல புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் கலவையான பலன்கள் கிடைத்தாலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும்.
சிம்மம்
புத்த பூர்ணிமா நாளில் நிகழும் சந்திர கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்கள் அற்புதமான பலனைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக எந்த ஒரு விவாதத்திலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபடக்கூடும். புதிய வேலையை செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பல வெற்றிகளும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
