Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
130 ஆண்டுகளுக்கு பின் புத்த பூர்ணிமா நாளில் உருவாகும் சந்திர கிரகணம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
Lunar Eclipse 2023: இந்து நாட்காட்டியின் படி, சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் பிறந்தார். புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் இன்று சித்ரா பௌர்ணமியும் கூட. இதனால் இந்நாள் இன்னும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமியும், புத்த பூர்ணிமாவும், ஒரே நாளில், அதுவும் மே 05 ஆம் தேதி வருகிறது. இதனால் இந்த நாள் மிகவம் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்நாளில் தான் 2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் நிகழவுள்ளது.

இந்த சந்திர கிரகணமானது மே 5 ஆம் தேதி இரவு 08.45 மணிக்கு தொடங்கி, மே 6 ஆம் தேதி நள்ளிரவு 01 மணி வரை நீடித்திருக்கும். இந்த சந்திர கிரகணமானது 130 ஆண்டுகளுக்கு பின் புத்த பூர்ணிமா நாளில் நிகழ்கிறது. அதோடு இந்நாளில் குரு, புதன், சூரியன் மேஷ ராசியில் இருப்பார்கள்.
அதே சமயம் சனி கும்ப ராசியிலும், செவ்வாயும், சுக்கிரனும் மிதுன ராசியிலும் இருப்பார்கள். இந்த கிரக நிலைகள் மற்றும் அபூர்வ சந்திர கிரகணத்தால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
புத்த பூர்ணிமா நாளில் வரும் சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது சிறந்த காலமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த அபூர்வ நிகழ்வால் தொழிலில் நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் இடமாற்றத்தைப் பெற விரும்பினால், அதற்கான வாய்ப்பு உள்ளது. முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த அரிய நிகழ்வினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணமானது சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணங்கள் எழலாம். வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications