Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
9 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசி பௌர்ணமியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும்..
Lunar Eclipse 2023: என்ன தான் சந்திர, சூரிய கிரகணங்கள் ஒரு வானியல் நிகழ்வுகளாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமியான இன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

இந்நாளில் சந்திரனை வழிபடுவதோடு, லட்சுமி தேவியையும் வழிபடுவது நல்ல பலனைத் தரும். அதுவும் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நன்கு காணப்படும்.
அதில் சிலருக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
9 ஆண்டுகளுக்கு பின் ஐப்பசி பௌர்ணமியில் சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் வருகிறது. இதற்கு முன் இந்த மாதிரியான நிகழ்வு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. அதாவது ஐப்பசி பௌர்ணமி சந்திர கிரகணமானது அக்டோபர் 8, 2014 ஆம் தேதி நிகழ்ந்தது. அதோடு அந்த கிரகணம் இந்தியாவிலும் தெரிந்தது.
இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மேஷ ராசியில் உள்ளார். அதோடு இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்போது இந்நிகழ்வால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நன்மைகளைத் தரும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பேச்சால் பலரை மயக்குவீர்கள்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நல்ல பலனைத் தரும். சிலருக்கு திடீர் பண வரவு கிடைக்கும். லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் நன்றாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். பணியிடத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில் வெற்றி காண்பார்கள். வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். லட்சுமி தேவியின் அருளால் பணப் பிரச்சனைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications